தமிழ் இலக்கியம்


தமிழ் இலக்கியம்
1.1 இலக்கியம்
J மனிதனின் மொழியோடு தொடர்புடையது, மனிதன் சிந்தனைக்கும் உணைவுக்கும் கற்பனைக்கும் அமைவது, ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டது.
J கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரை, வசனக்கவிதை.
J நாட்டுப்புறப்பாடல், விடுகதை

1.1.1   வறையறை


இலக்கியம் = இலக்கு + இயம்
இலக்கு - இலச்சியம்
இயம் -இயம்புதல்


@உயரியக் கொள்கையைச் செழுமையுடன் எடுத்துக் கூறுவது ஆகும்.
@ சமுதாயத்தை உருப்படுத்தும் உயர்ந்த கருத்துகளை மக்கள் உல்ளத்தைக் கவர்வதாய் அமைவது.
@ மக்களுக்கு பொதுவாö பயன்படும் பொருளை உடையதாய் இனிய வகையில் சொல்லப்படுவதாய் இருக்க வேண்டும்.
@ சொற்கட்டுச் சிறந்து இன்பம் பெற்றிருத்தல் வேண்டும்.
@ மக்களிடையே வாழ்க்கை நிகழ்ச்சிகளைî செய்யுள்களாகவோ நூல்களாகவோ படிப்போர் உள்ளத்தைக் கொள்ளைக்கொண்டு, அவரது வாழ்க்கையிம் வழிபடுத்த வல்லவை செம்மையான இலக்கணம்.

1.1.2   இலக்கியத் தோற்றம்
F மக்கள் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எடுத்துக்காட்ட விழதலே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகும்.
F மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறி, பிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் விருப்பம் கொள்கின்றனர்; கண்டு இன்புறுகின்றனர். அவற்றைப் பிறருக்குக் கூறி படிப்பினையை உணர்த்துகின்றனர். இதனால்தான் சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை போன்ற காôபியங்கள் பிறந்தன.
F ‘கார்டினல் நியூமன்’ என்பவர், உள்ளத்தைத் திறப்பதற்கும், திருத்துவதற்கும்,செம்மைபடுத்துவதற்கும், புரிந்து கொண்டு படிôபதை உள்வாங்கி, தவறுகளிø போக்கும் வன்மை உண்டாவதற்கும், பிறரை நல்வழிபடுத்துவதற்கும் இலக்கியம் பயன்படல் வேண்டும் என்கிறார்.

1.1.3   பல்வேறு அறிஞர்களின் கருத்துகள்
v  ரெனவெல்லக், ஆஸ்ட்டின் வாரென்
கற்பனையோடு தொடர்புடையதாய் உள்ளத்தையும், ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் பண்பாட்டுக் கருத்துகளைத் தாங்கி வருதல்.
v  ஹட்சன்
வாழ்க்கையில் மனிதர்கள் கண்டவை; அனுபனவித்தவை; உடனடியாகக் கவர்ச்சி ஊட்டுபவை; சிந்தித்தவை; உணர்ந்தவை ஆகும்.
v  டாக்டர் ச்.வே. சுப்பிரமணியன்
இலக்கு + இயம். தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
இலக்கு ; விளக்கம், நோக்கம், கொள்கை, குறிக்கோள்.
இயம் ; ஒலிப்பது, கூறுவது, வெளிப்படுத்துவது
-     நம் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் இயம்புவது- விளக்குவது இலக்கியம் என்கிறார்.

1.1.4   இலக்கியத்தின் சிறப்புகள் / பயன்கள்
·         சொற்சுவை உணர்வதற்கு
·         பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு
·         பொருட்சுவை உண்டாவதற்கு
·         நன்னெறிகளை வளர்ப்பதற்கு
·         படைப்பாற்றல் திறன் வளர்ப்பதற்கு
·         இறையுணர்வை ஊட்டுவதற்கு
·         உணர்ச்சியைத் தூண்டுவதற்கு
·         கற்று மகிழ்வதற்கு
·         கருத்துணர் ஆற்றலை வளர்ப்பதற்கு
·         முருகியல் உணர்வைச் சுவைப்பதற்கு
·         நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கு
·         மொழியாற்றலை மேம்படுத்துவதற்கு
·         இலக்கியப்பற்றை வளர்ப்பதற்கு.

1.2 இலக்கியக் கூறுகள்
உறுப்புகள் - கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம்

1.2.1   கருத்து
*      கருத்து, கருப்பொருள், பாடுபொருள் ஆகியவை ஒரு பொருள் குரிப்பவை.
*      இலக்கியப் படைப்பாளர்கள் தங்களின் பட்டறிவையும் உணர்ந்தவற்றையும் பிறரோடு பகிர்வதற்கும் படிப்பனை உணர்த்துவதற்கும் விரும்புகின்றனர். அந்தப் படிôபினையே கருத்து ஆகும்.
*      எந்த வடிவில் இலக்கியமானாலும், அதனுள் கருத்து அவசியம் இருத்தல் வேண்டும்; மானிட சமுதாயத்தைச் செம்மைப் படுத்தி  அறவழி வாழ துணைபுரியும்
1.2.2   கற்பனை
*      பகுத்தறிவைக் கொñடு , காரணம் காணும் அறிவு கொண்டு கலைகளைப் படைத்தல் இயலாது என்கிறார் கீட்ஸ்.
*      எண்ணி எண்ணிச் சிந்தனையில் வாழ்வதைவிட, உணர்ந்து உணர்ச்சியில் வாழும் வாழ்வே வேண்டும் என அவர் ஏங்கியதற்குக் காரணம் உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனை அவரிடம் சிறந்திருந்தமையே ஆகும்.
*      ரிச்சர்ட்ஸ் என்பவர் கற்பனை உணர்த்தும் சொல்லுக்கு அறுவகை பொருள் தருகின்றார்.
·         மÉக்கண்ணில் பொருள் காணுதல்
·         உவமை உருவகம் முதலியவற்றால் பொருûகளை உருவாக்கிக் காணுதல்
·         பிறருடைய மனநிலையை~ இன்பத்துன்பங்களை உணர்தல்
·         வெவ்வேறாக உள்ள பொருள்களை இயைத்துக் காணுதல்.
·         வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறுவகையில் அமைத்துக் காணுதல்.
·         பொருள்களை உள்ளவாறே உணரும்போது, மாறுபட்ட பொருள்களை நிறுத்தக் காணல்.
*      உள்ளவாறு அமையும் கற்பனைக்குப் பொருள்களை ஒழுங்கு படுத்தலும் அழகுற அமைத்தலும் தேவை; உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைக்கோ, உள்ளவற்றின் சிலவற்றைக் கூட்டலும் கழித்தலும் தேவையாகின்றன.

1.2.3   உணர்ச்சி
*      ஐந்து வகையான உணர்ச்சிகள் இலக்கியம் நொடிது வாழும் என்கிறார் வின்செஸ்டர்
·         நியாயமான, தக்க உணர்ச்சி, நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.
·         ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.
·         தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உனர்ச்சி; பொருந்ததாதும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து கொñடு வரப்படாமல் இயல்பாக அமைவது.
·          வாழ்க்கையில் பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி அமைதல்
·         மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய். நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்.

*      பல்வகை உணர்ச்சிகள் - மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றை விட அச்சம் துயரம், கவலை போன்ற உணர்ச்சிகளையுடைய இலக்கியம் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது.
*      ஷேக்ஸ்பியர் இன்பியல் நாடகத்தைவிட துன்பியல் நாடகங்கள் போற்றப்படுகின்றது என்கிறார்.
*      கலைஞர்களின் உள்ளம் அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையவனாக அமைகின்றன.
*      வின்செஸ்டர் - பாட்டில் உணர்ச்சியை அமைக்கும் புலவர் பாட்டின் வடிவத்திலும் அமைக்கலாம்; பாட்டின் பொருளிலும் அமைக்கலாம்.
*      பாட்டில் சொற்பபொருளிலும் கருத்திலும் உணர்ச்சியை அமைத்தலே, அதன் வடிவத்தில் அமைத்தலைவிட சிறந்தது என்கிறார்.
*      உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும் பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு அமைந்த பாட்டே சிறந்தது.

1.2.4   வடிவம்
*      ஒருவரின் உள்ளத்தின் துயரம் அவருடைய கண்ணீரில் புலப்பட, அந்தக் கண்ணீரைக் கண்ட மற்றொருவரின் உள்ளத்தைத் தாக்குவது போல கலைஞரின் உணர்ச்சி அனுபவம் அவர் படைத்த கலையின் வடிவத்தில் புலப்பட, அதை கற்பவரின் உள்ளத்திலும் அதே அனுபவம் விளங்குகிறது. ஆகவே, அனுபவம் ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர் உள்ளத்திற்குப் பரவுவதற்குக் கலையின் வடிவம் பயன்படுகிறது.

1.3 தமிழ் இலக்கிய அறிமுகம்
·         சங்கக் காலம் ~ மூவேந்தராட்சி பொற்காலம்
·         சோழர் காலம் - சோழ வேந்தர் ஆட்சி நற்காலம்
·         தற்காலம் - குடியாட்சி மறுமலர்ச்சி ஆட்சி காலம்
·         சங்க மருவிய காலம் ~ இருண்ட காலம்
·         பிற்காலம் ~ வறண்ட காலம்

v  சங்க காலம் (கி.மு. 500 - கி.பி.200)
ü  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சமுதாயப்பாடல்களாக அமைந்தன.
ü  பாடற்பொருளாகì காதலும் வீரமும் அமைந்தன.
ü  புறமாகிய  இயற்கை சூழலும், அகமாகிய அன்றாட வாழ்வு முறையும் நிலையாகக் கொண்டு, அகம், புறம் எனும் இரு திணைகளாகத் பிரிக்கப்பட்டன.
ü  இக்கால பிற்பகுதியில் தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு நூல்கள் விளங்குகின்றன.
v  சங்க மறுவிய காலம் (கி.பி.200 - 600)
ü  இருண்ட காலம் எனலாம்
ü  பதினெண் கீழ்க்கணக்கு தோன்றின. அவை ..திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகும்.
v  பல்லவர் காலம் (கி,பி. 600 - 900)
ü  பக்தி இலக்கிய காலம் அல்லது சைவ வைணவ காலம் எனலாம்.
ü  சைவ சமயத்தை வளர்த்த சிவனடியாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகும்.
ü  பன்னிரு திருமுறைகளில் இவர்கள் பாடிய பாமாலைகள் எட்டு திருமுறைகளாகும்.
ü  திருமூலர் இயற்றிய திருமந்திரம் வெளிவந்தது.
ü  காரக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி இயற்றியவர்.
v  சோழர் காலம் (கி.பி 900 - 1300)
ü  காப்பியக் காலம் எனலாம்.
ü  ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின.
ü  ஐஞ்சிறுகாப்பியங்கள் - உதய குமாரகாவியம், நானக்குமார காவியம், யாசோதர காவியம், சூளாமணி, நீலகேசி தோன்றின.
v  நாயக்கர் காலம் (கி.பி.1300 - 1750)
ü  பிரபந்த காலம் அல்லது உரையாசிரியர் காலம் எனக் குறிகலாம்.
ü  சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றின.
ü  மாணிக்கவாசகர் திருகோவையார் என்ற நூலை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதி பொருள்கள் அமைந்துள்ளன.
v  சேதுபதிகள் காலம் ( 1750-1947)

ü  நாயக்கர், மராத்தியர் ஆட்சியில் மொழிக்கு முதன்மை தந்தவர்.

v  ஐரோப்பியர் காலம் ( 1750 – 1947)
ü  சமயக் கலப்புக் காலம் அல்லது உரைநடைக்காலம் என்பர்.
v  தற்காலம் 1750 – 2000)
ü  மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.
ü  சொற்பொழிவு நூல்கள், உரைநடை, கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், குழந்தை இலக்கியம், கடித இஅல்க்கியம், தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கியத் திரனாய்வு, இலக்கிய வரலாறு, கவிதை, சிறுகதை, புதினம் போன்றவை வளர்ச்சிக் கண்டுள்ளது.