Thursday, December 2, 2010

தமிழ் இலக்கிய வரலாறு 2

தமிழ் இலக்கிய வரலாறு 2

3.1 பக்தி இலக்கியம்

3.1.1 முன்னுரை

* சங்கக்காலத்தையும் நீதி நூல்காலத்தையும் அடுத்தடுத்துத் தெளிவாகக் காணப்படுவது பக்தி இலகியம் ஆகும்.

* சைவ சமய பெரியவர்களான நாயன்மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி பாடல்களைப் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.

* நானய்ன்மார்கள் நால்வரும் ஆழ்வார்களின் பலரும் இசையோடு பக்தி இசையோடு பக்திப் பாடல்களைப் பாடி இறைவனை வழிப்பட்டனர்.

* இதன்வழி சமணமதத்தில் மன்னர்களை மாற்றவும் மக்களை உற்சாகப்ப்டுத்தவும் எழுச்சியை ஏற்படுத்த பக்திபாடல்கள் துணை புரிந்தன.

3.1.2 சைவ இலக்கியங்கள்

* சைவ சமயம் தமிழ் நாட்டின் பழமையான சமயங்களுள் ஒன்று.

* சிவனைத் தென்னாடுடைய ‘சிவன்’ என்று போற்றுவது மரபு.

* சைவ சமயத்தை வளர்த்தவர்கள் சமயக்குரவர் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் அடங்குவர்.

* இவர்கள் சிறப்பாகப் பாமாலைகளால் இறைவனை அழகு செய்து பாடியவர்கள்.

3.1.3 நாயன்மார்கள்

அ) திருஞானசம்பந்தர்

* நான்மறையின் தனித்துணையாக விளங்கியவர்.

* அவதரித்த ஊர் சீர்காழி

* மூன்று வயதாக இருந்தபோது, கோவில் குளக்கரையில் விட்டு சிவபாதர் குளத்தில் மூழ்கவே, தந்தையைக் காணாது பசியும் மேலிட குழந்தை அழுந்தது. அப்போது அம்மையப்பர் காட்சியளித்து பாலோடு ஞானத்தையும் கலந்தூட்டி மறைந்¾¡÷.

* கையில் கிண்ணமும் வாயில் பாலும் வடியவும் கண்ட தந்தை “யார் கொடுத்த பாலினை உண்டாய்” என அதட்டவே, ‘தோடுடைய செவியன்’ எனப்பாடி அம்மையப்பரைச் சுட்டிக் காட்டினார்.

* திருத்தலங்கள்தோறும் இசையுடன் தமிழ்ப் பாடல்களைப் பாடி ‘நாளுமின்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ எனப் போற்றப்பெரும் சிÈப்பினை அடைந்தார்.

* தமிழ் வாழ்வில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த சம்பந்தர், தமிழ்நாட்டில் சைவநெறி தழைத்தோங்க பெரும் பணியை மேற்கொண்ட மங்கையற்கரசியாரைத் தேன் தமிழால் பாராட்டினார்.

* இவருடைய தேவாரப்பாடல்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

* இவர் பாடிய 4213 பாடல்களே கிடத்துள்ளன.

ஆ) திருநாவுகரசர்

* திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளான் குடியில் தோன்றியவர்.

* தந்தையார் பெயர் புகழனார்; தாயார் மாதினியார்.

* அவரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.

* இவரும் ஞானசம்பந்தரும் ஒரே காலத்தவர்.

* இலகு எத்ஹ்தும் உழவராப் படையாளியாகிய இவர், சிவ தலங்கள் தோறும் சென்று பணிப்புரிந்து சிவப்பெருமானைப் பாடி மகிழ்ந்தார்.

* இவருடைய பா¼øகள் 4,5,6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இவை முறையே திருநேரிசை,திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்.

* வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்த நாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியலோம், நமனை அஞ்சோம்’ என அஞ்சா நெஞ்சினராய்த் திகழ்ந்து துன்பங்களை வென்றார்.

* பல்லவ மன்னன் இவரை நீற்றறையில் இட்டபோது இவர் ‘மாசில் வீணைÔம் மாலைமதியமும்’ எனும் பாடல் இவர் திண்ணிய உள்ள உறுதியையும் ஈசன் கழலின் சிறப்பினையும் ஒருங்கே உணர்த்தும்.

* இவர் பாடிய பாடல்கள் 4900. கிடத்தவை 3066.

* திருத்தாண்டக வேந்தர் எனும் புதிய பா முறையைக் கையாண்டமையால் இவர் தாண்டக வேந்தர் எனும் பெயர் பெற்றார்.

* மருள் நீக்கியார் என்னும் இயற்பெயருடைய இவரைச் சம்பந்தர் ‘அப்பரே’ என அழத்தார்.

* இறைவானரோ இவருக்கு ‘நாவுகரசர்’ எனும் பெயரைச் சூட்டினார்.

இ) சுந்தரர்

* இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் மரபில் அவதரித்தார்.

* இவருடைய தந்தையார் சடையனர்; தாயார் இசைஞானியார்.

* முற்பிறவியில் கயிலை மலையில் சிவப்பேருமானின் அணுகத்தொண்டராக இருந்து, பின் மண்ணுலகத்தில் பிறந்து, புத்தூர் சடங்கவி சிவச்சாரியாரின் மகளை மணக்க முனைந்தபோது, இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார்.

* இறைவன் அருளால் பரவையார், சங்கிலியார் எனும் இருமாதரை மணந்து, தலங்கள்தோறும் சென்று, சைவை பயிர் தழைக்குமாறு செய்த பிறகு வெள்ளானை மீது ஏறி திரும்பவும் கயிலை சென்றடந்த வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகக் கூறுகின்றது.

* தலங்கள் தோறும் சென்று சிவப்பிரானது புகழைப் பாடிய இவருக்கு ‘வந்தொண்டர்’,’தம்பிரான் தோழர்’ எனும் பெயர் உண்டு.

* 4000 பதிகங்களைப் பாடியுள்ளார்.ஆனால் கிடைப்பன 1025 பாடல்களே.

* இவரிம் தேவாராப் பாடல் 7ஆம் திருமுறையாக விளங்குகின்றன.

ஈ) மாணிக்கவாசகர்

* பாண்டிய நாட்டில் திருவாதவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர்.

* இயற்பெயர் வாதவூரர்.

* இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாகப் பாண்டிய மன்னனுக்காகக் குதிரைகள் வாங்கப் புறப்பட்டார். திருப்பெருந்துறை எனும் தலத்தில் குருந்த மரத்தடியில் இறைவன் இவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார்.

* பின்னர் வாதவூரர் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் பாடல் பலவற்றை இயற்றினார்.

* வாதாவூரில் மணிபோன்ற வாசகங்களைக் கேட்ட இறைவன் ‘மாணிக்கவாசகர்’ என்ற பெயரை இவருக்குச் சூட்டினார்.

3.2 வைணவ சமயம்

வைணவப் பெரியோர்களின் நாலாயரத் திவ்விய பிரபந்தங்களும் பெரிதும் பாராட்டப் பெறுகின்றன.

3.2.1 பொய்கையாழ்வார்

* கச்சியம்பதியில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றிய காரத்தினால் பொய்கையார் எனும் பெயர் பெற்றார்.

* இவர் வைணவ சமயத்தின் ‘விடிவெள்ளி’ என்று போற்றப்படுகிறார்.

* திருமாலின் பாஞ்ச சன்னியம் எனும் சங்கத்தின் அம்சமான இவர், பகவத் பக்தி நிறைந்த ‘முதல் திருவந்தாதி’ எனும் நூறு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

* இறைவனின் இயல்புகளை ஏத்தித் தொழுவார் நிலைக்குத் தக்கபடி அவன் அருளுவான் என்பதை எடுத்துக் காட்டியதோடு உலகளந்த பெருமானே முதல் மூர்த்தியாவார்என்றும் உரைக்கின்றார்.

3.2.2 பூதத்தாழ்வார்

* திருமாலின் கெள மோதகீ எனும் கதாயுதத்தின் அம்சமான இவர் மகாபலிபுரம் என வழங்கும் திருக்கடல் மல்லையில் தோன்றியவர்.

* இவ்வுடலின் ஐம்பெஉம் பூதங்களுமே திருமால்தான் என்று கொண்ட திட நம்பிக்கையின் காரணமாக இவட் பூதத்தாழ்வார் எனப்பட்டார்.

* இரண்டாம் திருவந்தாதி எனும் நூறு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

* இப்பாசுரம் பூதத்தாழ்வாரின் தமிழ்ப்பற்றையும் கடவுள் பக்தியையும் நன்கு புலப்படுத்துகின்றன.

3.3 சோழர் காலம்

* தமிழ் இலக்கிய போக்கையே மாற்றி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது சோழர் காலம்.

* இலக்கியத்துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

* கம்பரும் சேக்கிழாரும் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.

* சிற்றிலக்கியங்கள் பல தோன்றின.

* நாடகம், நடனம், இசை ஆகிய கலைகள் எல்லாம் பெருவாழ்வு எய்தின.

* ஆழ்ந்த தத்துவக் கருத்துகள் கொண்ட நூல்கள் எல்லாம் சமயக் கருத்துகளின் சாரமாய் எழுந்தன.

* இக்காலத்தில் தமிழகம் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் தழைத்து ஓங்கின.

3.4 ஐம்பெருங்காப்பியம்

3.4.1 சீவக சிந்தாமணி

* இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர். இவரை வீரமாமுனிவர், ‘தமிழ்க் கவிஞருள் அரசர்’ என்று போற்றுகின்றார்.

* காப்பியத் தலைவனான சீவகன்,காந்தவருத்தை, குணமாலை, பதுமை,கேமசரி, கனகமாலை, விமலை,சு ரமஞ்சரி, இலக்கண ஆகியவரை மணந்ததோடு கல்வியின் மேன்மையால் நாமகளையும், திருவின் செம்மையால் பூமகளையும், அரச செல்வத்தை அடைந்ததால் மண்மகளையும், வீடு பேற்றினை அடைந்ததால் முத்தி மகளையும் மணந்தான் என நயம்படக் கூறுவதால் இதனை மணநூல் என்பர்.

* யாழ் போட்டியில் காந்தருவத்தையும், யானையை அடக்கியதால் குணமாலையையும், மருத்துவத்துறை திறமையால் பரிசாகப் பெற்று திருமணம் புரிந்தார்.

* இறுதியில் எல்லாவற்றையும் துறந்து வீடு எய்தினான்.

3.4.2 வளையாபதி

* புறத்திரட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் அறுபத்தாறு பாடல்களைத் தவிர முழுமையாகக் கிடக்கவில்லை.

* உரையாசிரியர்கள் உரையிலும் மேற்கோளாகச் சில பாடல்கள் காணப்படுகின்றன.

* இது சமண நூலாகும்.

* நூலாசிரியரைப் பற்றி குறிப்பு இல்லை.

* இக்கதை வைசிய புராணத்தின் முப்பத்தைந்தாவது அத்தியாயத்தில் காணப்படுகின்றது.

3.4.3 குண்டலகேசி

* இது விருத்தத்பாவாலதமைந்துள்ளதால் இதனை ‘குண்டல்கேசி விருத்தம்’ என அழப்பர்.

* இந்நூலை இயற்றியவர் நாதக்குத்தனார் என்பவர்.

3.5 ஐஞ்சிறு காப்பியங்கள்

3.5.1 உதயண குமார காவியம்

* ‘உதயணன் கதை’ என்று கூறப்படுகின்றது.

* எளிமையான இதன் பாடல்கள் அழகிய விருத்தப்பாவால் ஆனவை.

* இந்நூல் ஆறு காண்டங்களாக அமைந்து 367 பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது.

* ஆசிரியை சமண சமயத்தைச் சார்ந்தவர்; பெயர் தெரியவில்லை.

3.5.2 நாக குமார காவியம்

* ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

* புலவர் மு.சண்முகம் அவர்களால் 1973ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

* ஐந்து சருக்கங்களையும் 170 பாடல்களையும் உடையது.

* பாடல்கள் யாவும் விருப்பத்தாவல் அமைந்துள்ளன.

* ‘நாகபஞ்சமி’ எனும் பெரும் உண்டு.

* கெளதமர் சிரேணிக மாமன்னருக்குக் கூறுவதாகவே இக்காப்பியக் கதை அமைந்துள்ளது.

3.5.3 யசோதர காவியம்

* நூலாசியர் சமணர் என்பதை தவிர மற்ற குறிப்புகள் தெரியவில்லை.

* தீய பயன் பல பிறவிகள் வரை தொடர்ந்து துன்புறுத்தும் என்பதை வலியுறுத்துகிறது.

3.5.4 சூளாமணி

* இதன் ஆசிரியர் தோலா மொழித்தேவர்.

* இதன் மூலக்கதை ஆருகத மகாபுரானத்தைத் தழுவியது.

* இந்நூல் பன்னிரண்டு சுருக்கங்களில் 2331 செய்யுள்களில் கூறுகின்றது.

* பாவகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளிலும் ஓரளவு ஒத்துள்ளன.

* இóநூலைப் பற்றிய குறிப்பு சிரவண பெல்கொலக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

3.5.5 நீலகேசி

* இது குண்டலகேசி எனும் பெளத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண நூல்.

* ‘நீலகேசித்தெருட்டு’ என்றும் வழங்கப்படும்.

* ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

* இந்நூலுக்குச் சமய திவாகர வாமன முனிவர் ‘ சமயதிவாகர விருத்தி’ எனும் உரை எழுதியுள்ளார்.

3.6 சமணக் காப்பியம்

* மேருவந்தர புராணம் என்ற நூல், மேரு, மந்தரா எனும் இரண்டு சகோதர்களின் வரலாற்றினைக் கூறுகின்றது.

* 1406 செய்யுள் கொண்ட இந்நூல் 12 சருகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

* வாமனாசாரியார் இயற்றினார்.

* சமணர்கள் அக்காலத்தே கொண்டிருந்த நம்பிக்கையினையும் கோட்பாட்டினையும் இந்நூலில் காணலாம்.

3.7 பொளத்தக் காப்பியம்

* விம்சார கதை எனும் நூல் மறைந்து போன நூல்களில் ஒன்று.

* புத்த சீடனாம் மகதநாட்டு மன்னன் விம்பசாரன் வரலாற்றினை இந்நூல் கூறுகின்றது.

3.8 இலக்கண நூல்கள்

3.8.1 நன்னூல்

* சோழர் காலத்தில் தோன்றிய மிகச் சிறந்த இலக்கண நூல்.

* எழுத்திகாரம் சொல்லதிகாரம் எனும் இரு பகுதிகளையுடையது.

* தெளிமை, எளிமை வரையறையின் நுட்பம், பாகுபாட்டின் சிறப்பு ஆகியவை உடையது.

* இந்நூலின் ஆசிரியர் பவ½ந்தி முனிவர்.

3.8.2 யாப்பருங்கலம், யாப்பருங்காலக் காரிகை

* அமிதசாகரர் எனும் சமண முனிவர் இவ்விரண்டு நூல்களையும் இயற்றியுள்ளார்.

* ‘யாப்பருங்கலம்’ அகவற் பாவால் ஆனது.

* ‘யாப்பருங்கலக் காரிகை’ கட்டளைக் கலித்துறையால் ஆனது.

3.8.3 புறப்பொருள் வெண்பாமாலை

* ஆசிரியர் ஐயனாரிதனார்.

* தொல்காப்பியத்திற்குப் பிறகு புறப்பொருள் பற்றி தோன்றிய தனிநூல் புறப்பொருள் வெண்பாமாலை ஆகும்.

* இது வென்பாவால் ஆனது.

* வெட்சி முதல் பெருந்திணை வரை 12 பாடல்கள் உடையது.

* இதிலுள்ள விளக்கப்பாடல்கள் 261.

3.8.4 நம்பி அகப்பொருள்

* ஆசிரியர் நாற்கவிராச நம்பி.

* இவர் சமண சமயத்தவர் ஆவார்.

* இவர் தொல்காப்பிய்ரின் அகப்பொருள் இலக்கணத்தையும், தமிழ் இலக்கியங்களையும் நன்கு ஆராய்ந்து தாம் கண்டவற்றைத் தொகுத்து முறப்படுத்திச் சூத்திரங்களாக இயற்றியுள்ளார்.

* இந்நூல் அகத்திணையியல், களவியல் வரைவியல், கற்பியல் ஒழிபியல் எனும் ஐந்து பிரிவுகளையுடையது.

3.8.5 நேமிநாதம்

* ஆசிரியர் குணவீரர் பண்டிதர் ஆவார்.

* சமண சமயத்தவர் ஆவார்.

* எழுத்து, சொல் எனும் இரண்டு இலக்கணங்களையும் 96 நூற்பாக்களில் சுருங்கக் கூறுகிறது.

* நேமி தீர்த்தங்கரர் மீது உள்ள பக்தியால் தாம் இயற்றிய இலக்கண நூலுக்கு நேமிநாதம் என பெயரிட்டார்.

3.8.6 வீரசோழியம்

* பெளத்த சமயத்தைச் சார்ந்த புத்திமித்தார் ஆவார்.

* இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழின் ஐந்திலக்கணத்தையும் சுருக்கமாக உணர்த்தும் இலக்கண நூலாகும்.

3.9 நிகண்டுகள்

* சொற்களின் பொருள்களை விளக்கும் நூல்களுக்கு நிகடு என்று பெயர்.

* தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியல் இத்தன்மையதே.

* இது செய்யுள் வடிவிலும் நூற்பா வடிவிலும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இயற்றப்பட்டுள்ளன.

* தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தன.

3.9.1 திவாகர திகடு

* இது பழமை வாய்ந்தது.

* சேந்தன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்குக் இணங்க திவாகர முனிவரால் இயற்றப்பட்டது.

* சேந்தன் திவாகரம் என்ற பெயரும் இடற்குண்டு.

3.9.2 பிங்கல நிகண்டு

* பத்து பகுதிகள் உடையது.

* 16091 சொற்கள் விளக்கப்படுகின்றன.

* ஆசிரியர் பிங்கலர்.

3.9.3 சூடாமணி நிகண்டு

* ஆசிரியர் மண்டல புருடர்.

* 12 பகுதிகளுடையது.

* முதல் பகுதி தேவர்களியும், இரண்டாம் பகுதி மனிதர்களையும், மூன்றாவது விலங்குகளையும், நான்காவது தாவரங்களையும், ஐந்தாவது இடங்களையும், ஆறாவது பொருள்களையும், ஏழாவது செயற்கை பொருள்களையும், எட்டாவது பொருட் குணங்களையும், ஒன்பதாவது ஒலிகளைபற்றியும், பத்தும் பதினொன்றும் எதுகை, மோனை பற்றியும், பன்னிரண்டாவது இணையும் சொற்கள் பற்றியும் கூறுகின்றன.

3.10 சித்தர் பாடல்கள்

* சித்தர்கள் மரண பயத்தை வென்றவர்கள்.

* இவர்களால் எதையும் சாதிக்க முடியும்

* நீரினுள் இருப்பர், நெருப்பிலும் அமர்வர், கூடுவிட்டு கூடு பாய்வர்; அந்தரத்தே செல்வர்.

* தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

* நாதர்முடி மேலிருக்கும் நல்லப் பாம்பே என்ற பாம்பாட்டிச் சித்தர் பாடலைô பாடத அரங்கு இல்லை எனலாம்.

* தனிழில் ‘பதினெண் சித்தர்’ உண்டு.

3.10.1 திருமூலர்

* ஞானம் என்பது மெய்யறிவு.

* பாடல்களில் பலப்பல ஞானமுறைகள் கூறப்படுகின்றன.

* குரு உணர்த்துவதால் மட்டுமே இந்த ஞான நெறிமுறைகளைப் பயில முடியும்.

* சித்தர்கள் அனுபவித்த பேரின்பமும், மெய்ஞ்ஞானமும் எல்லா நாட்டு மக்களுக்கும், எல்லா மதத்தவர்களுக்கும் பொதுவானவை.

3.10.2 சிவவாக்கியர்

* இவர் யோகசித்தர்களுள் ஒருவர்.

* புறச்சடங்குகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து மன ஒருமைப்பாட்டை மறக்கக்கூடாது எனும் கருத்தைக் கூறுகின்றார்.

* உண்மை வழிபாடு ஆன்ம வழிபாடுதான்.

* ஆன்மா மாசற்ற தன்மையை அடைதல் வேண்டும் என்பதனை அனைவரும் உணர வேண்டும் என்கின்றார்.

3.10.3 இடைக்காட்டுச் சித்தர்

* கோனே, கோனாரே, தாண்டவக்கோனே எனும் சொற்கள் அமையப் பாடுதல் இவரது இயல்பு.

* மனம்தான் எல்லா இன்ப தின்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். ஆகவே, மனத்தை அடக்கினால் ஆன்மா முக்தி பெறும். இதனை எளிய முறையில் உணர்த்துகின்றார்.

3.10.4 கடுவெளிச் சித்தர்

* கடுவெளி என்றால் பரவெளி என்று பெயர்.

* பரம் பொருள் நிலையக் கூறுவதாகப் பாடல் இயற்றியுள்ளார்.

* ‘நந்த வனத்திலோ ராண்டி’ எனும் பாடல் மிகச் சிறந்த பாடலாகும்.

* சித்தர் பாடல்கள் காட்டுகின்ற ஞானப் பாதையில் செல்வோமேயானால் ஆன்மாவில் பொய், களவு, காமம், புறங்கூறல், பயனில பேசல் முதலான மாசுகளின் தாக்குதல்களிருந்து விடுபடலாம்.

3.11 ஐயோபியர் காலம்

3.11.1 தமிழில் உரைநடை வளர்ச்சி

3.11.2 மேனாட்டுக் கிறித்துவர்கள்

3.11.3 தமிழ்க் கிறித்துவர்கள்

No comments:

Post a Comment